திருமுருகன்பூண்டியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி மந்தம்

தற்போதைய நிலையில் வீடுகள் கட்டும் பணி முடிந்த போதும், ஒயரிங் வேலை, கதவு, ஜன்னல் பொருத்துவது உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

அவிநாசி:

நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பில், திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் 225 வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. கடந்த இரு ஆண்டுக்கு முன் கட்டுமானப்பணி முடிந்த நிலையில், ஒயரிங் வேலை, கதவு, ஜன்னல் பொருத்தும் பணி நடக்கவில்லை.

அதே சமயத்தில் தான், அவிநாசி சூளையிலும், அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி துவங்கியது. அங்கு, ‘விறுவிறு’ வென பணி முடிந்து  பயனாளிகளுக்கு வீடுகளும் ஒதுக்கப்பட்டு பலரும் படிப்படியாக குடியேறி வருகின்றனர்.

ஆனால் பூண்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணியில் வேகமில்லை. தற்போதைய நிலையில் வீடுகள் கட்டும் பணி முடிந்த போதும், ஒயரிங் வேலை, கதவு, ஜன்னல் பொருத்துவது உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

இரண்டு பிளாக்குகள் மட்டுமே  வர்ணம் பூசி, தயார் நிலையில் உள்ளது. எனவே, குடியிருப்பு கட்டும் பணியை விரைவாக முடித்து ஒப்படைக்க வேண்டும் என பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com