

திருப்பூர்:
பிரம்ம கமலம் பூ இமயமலைப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டதாக கூறப்படுகிறது. இது ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் தன்மையுடையது. இரவில் மலர்ந்து பகலில் வாடிவிடும். மருத்துவ குணம் நிறைந்த இப்பூ திருப்பூர் அருகே கொடுவாயை சேர்ந்த அபிராமி என்பவர் வீட்டில் பூத்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில்:
பிரம்ம கமலம் பூ, சிவபெருமானுக்கு மிகவும் உகந்தது. இரவு 8 மணிக்கு மேல் பூக்க துவங்கி அதிகாலை 2 மணிக்கு விரியும். அதிகாலை வரை தூங்காமல் விழித்திருந்து பூ மலரும்போது பூஜை செய்து வழிபட்டோம் என்றார்.இதுபற்றி அறிந்தஅருகில் வசிப்போரும், பிரம்ம கமலம் பூவை ஆச்சரியத்துடன் பார்த்து வழிபாடு செய்து சென்றனர்.