உடுமலை குடியிருப்பு பகுதிகளில் வவ்வால் - பாம்பால் பொதுமக்கள் அச்சம்

விஷப் பாம்புகளும் வண்டுகளும் அதிகளவில் இருப்பதால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து விடும் அபாயம் உள்ளது.
புதர் மண்டிக் கிடக்கும் குடியிருப்பு பகுதிகள்
புதர் மண்டிக் கிடக்கும் குடியிருப்பு பகுதிகள்
Published on

உடுமலை:

உடுமலைப்பேட்டை தீயணைப்பு துறையின் பின்பகுதியில் உள்ள இலவம் பஞ்சு மரத்தில் அதிக அளவில் தங்கி இருக்கும் வவ்வால்கள் அப்பகுதியில் குடியிருக்கும் பொது மக்கள் வீடுகளில் புகுந்து அட்டகாசம் செய்கின்றன.

மேலும் தீயணைப்பு நிலையம் பின்பகுதியில் புதர் மண்டிக் கிடக்கும் இடங்களில் விஷப் பாம்புகளும் வண்டுகளும் அதிகளவில் இருப்பதால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து விடும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் நேரில் சென்று கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com