பல்லடத்தில் பழுதான அரசு பஸ்சால் போக்குவரத்து பாதிப்பு

திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்காக அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.அங்கிருந்த பொதுமக்கள் பேருந்தை நடு வழியிலிருந்து தள்ளி சற்று ஓரமாக நிறுத்த உதவினர்.
பழுதாகி நின்ற அரசு பஸ்சை படத்தில் காணலாம். 
பழுதாகி நின்ற அரசு பஸ்சை படத்தில் காணலாம். 
Published on

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று காலை முதலே மழை பெய்து கொண்டிருந்த நிலையில், திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்காக அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த பஸ் பல்லடம் பனப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, திடீரென பிரேக் டவுன் ஆகியது. ஓட்டுநர் எவ்வளவோ முயன்றும் பஸ் ஸ்டார்ட் ஆகவில்லை. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் பேருந்தை நடு வழியிலிருந்து தள்ளி சற்று ஓரமாக நிறுத்த உதவினர்.

இதற்கிடையே காலை நேரமானதால் பள்ளி மற்றும் வேலைக்கு செல்லும் போக்குவரத்து மிகுந்த நேரத்தில் நடுவழியில் அரசு பேருந்து நின்றதால் பல்லடத்தில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த போக்குவரத்து நெரிசலால், பல்லடம் நகரமே திக்கு முக்காடி போனது. பின்னர் ஒரு வழியாக ஓட்டுநர் அந்தப் பேருந்தை இயக்கி பனி மனைக்கு எடுத்துச் சென்றார். இந்த போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com