search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாராபுரம் நல்லம்மை பாலிடெக்னிக்கில் பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
    X
    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய காட்சி. 

    தாராபுரம் நல்லம்மை பாலிடெக்னிக்கில் பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

    • நிகழ்ச்சிக்கு கல்லூரி சேர்மன் வேணுகோபாலு முன்னிலை வகித்தார் .
    • அறங்காவலர்கள் முத்துக்குமார் ,சவுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர் .முடிவில் பிரின்ஸ்பால் முரளிதரன் நன்றி கூறினார் .

    தாராபுரம்:

    தாராபுரம் வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து தகவல் அறியும் உரிமை சட்ட வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு முகாமை தாராபுரம் ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக்கில் நடத்தினர்.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி சேர்மன் வேணுகோபாலு முன்னிலை வகித்தார் .கல்லூரி விரிவுரையாளர் ராஜேஷ் கண்ணா வரவேற்றார். சட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தகவல் உரிமை சட்டத்தில் உள்ள சிறப்புகள் குறித்தும், காலக்கெடு,மேல்முறையீடு போன்றவற்றை விரிவாக தாராபுரம் சப்-ஜட்ஜ் தர்ம பிரபு எடுத்துக்கூறி பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். மாஜிஸ்திரேட் பாபு மோட்டார் வாகன சட்டம் குறித்து பேசியதுடன் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் பெற்றோர்களுக்கு தண்டனை வழங்க ப்படும் என்பதால் முறையாக லைசென்ஸ் பெற்ற பிறகு ஓட்ட வேண்டும் என்று பேசினார்.

    தாராபுரம் தீயணைப்பு அலுவலர் ஜெயச்சந்திரன் பேரிடர் காலங்களில் ஏற்படும் விபத்துக்களில் இருந்து எவ்வாறு தற்காத்து கொள்ள வேண்டும் என்று தீயணைப்புகுழுவினர் மூலம் செயல் விளக்கம் அளித்தார். கல்லூரி செயலாளர் விஷ்ணு செந்தூரன் ,அறங்காவலர்கள் முத்துக்குமார் ,சவுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர் .முடிவில் பிரின்ஸ்பால் முரளிதரன் நன்றி கூறினார் .

    Next Story
    ×