குறிச்சிக்கோட்டையில் நிரந்தர கால்நடை டாக்டர் நியமனம்

டாக்டர் வரும் நேரம், பணி நேரம், விடுமுறை விபரம், முகாம் செல்லும் இடங்கள் போன்ற தகவல்கள் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்படுகிறது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

உடுமலை:

உடுமலை குறிச்சிக்கோட்டையிலுள்ள அரசு கால்நடை மருந்தகத்தில் டாக்டர் விடுமுறையில் சென்றிருந்த போது, ஜல்லிப்பட்டி டாக்டர் மாற்றுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார். இருப்பினும்  இந்த மருந்தகம் முறையாக திறக்கப்படுவது இல்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து கால்நடை உதவி இயக்குனர் ஜெயராம் கூறுகையில்:

கால்நடை மருந்தகத்தில் நிரந்தர டாக்டர் பணியில் உள்ளார். தடுப்பூசி செலுத்துதல், பயனாளிகள் தேர்வு போன்ற பல்வேறு பணிகளையும் மேற்கொள்ளும் வகையில் மாலை நேரங்களில் முகாம் செல்ல வேண்டியுள்ளது. டாக்டர் வரும் நேரம், பணி நேரம், விடுமுறை விபரம், முகாம் செல்லும் இடங்கள் போன்ற தகவல்கள் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்படுகிறது என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com