ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சர்வர் பிரச்சினையால் பல விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

உடுமலை:

ஆசிரியர் தேர்வு வாரியம், நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பை கடந்த மார்ச் 7- ந்தேதி வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்களை ஏப்ரல் 13-ந்தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. 

ஆனால் கடைசி ஒரு வாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சர்வர் முடங்கியதால் பல ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம் செய்ய முடியவில்லை. 

சர்வர் பிரச்சினையால் பல விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 

இதுகுறித்து பலர் புகார் தெரிவித்த நிலையில், கூடுதல் கால அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. 

எனவே விண்ணப்பிக்க தவறியவர்கள் ஏப்ரல் 26-ந்தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com