வீடுதோறும் சிறு நூலகம் அமைக்க திட்டம்

பூளவாடி மனித வளம்-2030 என்ற தலைப்பில் சிறப்புத்திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.நூலக வாசகர் வட்டம் சார்பில் இலவசமாக உண்டியல் வழங்கமுடிவெடுக்கப்பட்டுள்ளது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

உடுமலை:

உடுமலை பூளவாடி கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில், பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அவ்வகையில் நூலக வார விழாவையொட்டி, பூளவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில், பூளவாடி மனித வளம்-2030 என்ற தலைப்பில் சிறப்புத்திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்கள் வீடுதோறும், சிறு நூலகம் அமைப்பதற்கான பணிகளை துவக்க தீர்மானிக்கப்பட்டது.மேலும், இத்திட்டத்துக்கு மாணவர்கள் சிறு தொகை சேமிக்க, நூலக வாசகர் வட்டம் சார்பில் இலவசமாக உண்டியல் வழங்கமுடிவெடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இத்திட்டத்தில் இணைய 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். முடிவில் கிளை நூலகர் லட்சுமணசாமி நன்றி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com