நிப்ட்-டீ கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு - நாளை நடக்கிறது

இக்கல்லூரியில் படித்த மாணவர்கள் பலர் உயர்ந்த பதவிகளிலும், தொழில்முனைவோராகவும் உள்ளனர்.தனியார் டி.வி. சூப்பர் சிங்கர் புகழ் வானதி சுரேஷ் பாடல் நிகழ்ச்சி, டி.ஜே. நிகழ்ச்சி நடக்கிறது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

 திருப்பூர்:

திருப்பூர் சிட்கோ முதலிபாளையத்தில் அமைந்துள்ள நிப்ட்-டீ காலேஜ் ஆப் நிட்வேர் பேஷன் கல்லூரி 25-வது ஆண்டு நிறைவு செய்வதை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நாளை 1-ந் தேதி காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. இந்த கல்லூரியில் 1997-ம் ஆண்டு முதல் படித்த அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கல்லூரியில் படித்த மாணவர்கள் பலர் உயர்ந்த பதவிகளிலும், தொழில்முனைவோராகவும் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரேநாளில் சந்திக்கும் வாய்ப்பு இந்தநிகழ்ச்சி மூலம் சாத்தியமாகிறது. மேலும் தனியார் டி.வி. சூப்பர் சிங்கர் புகழ் வானதி சுரேஷ் பாடல் நிகழ்ச்சி, டி.ஜே. நிகழ்ச்சி நடக்கிறது. இந்த தகவலை கல்லூரி முதல்வர் கே.பி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com