பல்லடம் அருகே 30 நாய்களை விஷம் வைத்து கொன்றவர் கைது

தெரு நாய்கள் திடீரென மர்மமான முறையில் இறந்து போய் உள்ளன. ஆட்டு இறைச்சி குடலில் விஷம் வைத்து அப்பகுதி முழுவதும் தூவி நாய்களைக் கொன்றுள்ளார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி லட்சுமி நகர், வ.உ.சி நகர், கரைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக அங்கு சுற்றித் தெரியும் தெரு நாய்கள், திடீரென மர்மமான முறையில் இறந்து போய் உள்ளன. மர்மமான முறையில் தெரு நாய்கள் இறந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், அக்கம் - பக்கம் வீதிகளில் விசாரித்த போது அந்தப் பகுதிகளிலும் இதே போல சுமார் 30க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் மர்மமான முறையில் இறந்தது தெரிய வந்தது.

இந்த நிலையில் நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோபிநாத் என்பவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசாரின் தீவிர விசாரணையில், லட்சுமி நகரில் உணவகம் நடத்திவரும் பாலு என்பவர் நாய்களுக்கு ஆட்டு இறைச்சி குடலில் விஷம் வைத்து அப்பகுதி முழுவதும் தூவி நாய்களைக் கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com