search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்டத்தில் வீடுகள்-கடைகளில் தேசிய கொடிகள் ஏற்றம்
    X

    திருப்பூரில் வீடுகள்-கடைகளில் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டதை படத்தில் காணலாம். 75-வது சுதந்திரதினத்தையொட்டி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வீடுகள்தோறும் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டன. அதனை படத்தில் காணலாம். 

    திருப்பூர் மாவட்டத்தில் வீடுகள்-கடைகளில் தேசிய கொடிகள் ஏற்றம்

    • தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
    • 18 ஆயிரம் கொடிகள் தயாரிக்கப்பட்டு நகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று தேசியக்கொடி வழங்கினர்.

    பல்லடம் :

    75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று முதல் 15-ந்தேதி வரை வீடுகள், நிறுவனங்கள் , கடைகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டன.

    திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் உள்பட மாவட்டம் முழுவதும் வீடுகள், அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கடைகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டன. மேலும் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் வீடுகள் தோறும் தேசிய ெகாடிகள் விநியோகிக்கப்பட்டன. அதனை பொதுமக்கள் தங்களது வீடுகள் முன்பு ஏற்றினர்.

    பல்லடம் நகராட்சியில் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு தேசிய கொடியை ஏற்ற வைக்கும் நோக்கில் 18 ஆயிரம் கொடிகள் தயாரிக்கப்பட்டு நகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று தேசியக்கொடி வழங்கினர். அந்த கொடிகள் இன்று வீடுகள் மற்றும் கடைகளில் ஏற்றப்பட்டது.

    Next Story
    ×