மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27.64 லட்சம் மதிப்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் அமைச்சர்கள் வழங்கினர்

இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் கைபேசிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பயனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்களை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கிய காட்சி.
பயனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்களை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கிய காட்சி.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27.64 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் கைபேசிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.

மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமை தாங்கினார். செல்வராஜ் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முதற்கட்டமாக ரூ.15.86 லட்சம் மதிப்பீட்டில் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரையும், பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய 87 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11.78 லட்சம் மதிப்பீட்டில் கைபேசி என மொத்தம் 106 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27.64 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன் மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com