search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்
    X

    தமிழக அரசின் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்ற காட்சி 

    பல்லடம் அருகே வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்

    • கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் பல்லடத்தை அடுத்த கள்ளிப்பாளையத்தில் தமிழக அரசின் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • முகாமின் போது 5 பள்ளி மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளும், 6 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், இரண்டு வளர் இளம் பெண்களுக்கு இயற்கை நல பெட்டகம் உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

    பல்லடம்:

    கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் பல்லடத்தை அடுத்த கள்ளிப்பாளையத்தில் தமிழக அரசின் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். விழாவிற்கு வந்திருந்தவர்களை சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகதீஷ் குமார் வரவேற்றார். திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கே. செல்வராஜ் எம்.எல்.ஏ., பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார், துணைத் தலைவர் அபிராமி அசோகன், கள்ளிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த சிறப்பு முகாமை தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்து சிறப்பு முகாம் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து குறிப்பு விளக்கி பேசினார். இந்த முகாமின் போது 5 பள்ளி மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளும், 6 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், இரண்டு வளர் இளம் பெண்களுக்கு இயற்கை நல பெட்டகம் உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இந்த முகாமின் போது வடமலைபாளையம் மற்றும் அய்யம்பாளையத்தை சேர்ந்த 84 பேருக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களும், அறிவொளி நகரை சேர்ந்த 50 நபர்களுக்கு சாதி சான்றிதழும் வழங்கப்பட்டது.

    இந்த முகாமில் மொத்தம் 640 பேர் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். முடிவில் பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரவேல் நன்றி கூறினார்.

    Next Story
    ×