இந்திய மாணவர் சங்க மாநாடு குறித்து ஆலோசனை

இந்திய மாணவர் சங்கத்தின் 21வது மாவட்ட மாநாடு 30-ந் தேதி வேலம்பாளையத்தில் நடக்கிறது.மாநாட்டு ஏற்பாடு குறித்து வேலம்பாளையத்தில் வரவேற்பு குழு கூட்டம் நடந்தது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

இந்திய மாணவர் சங்கத்தின்21வது மாவட்ட மாநாடு 30-ந் தேதி வேலம்பாளையத்தில் நடக்கிறது.மாநாட்டு ஏற்பாடு குறித்து வேலம்பாளையத்தில் வரவேற்பு குழு கூட்டம் நடந்தது. நிர்வாகி சுகுமார் தலைமை வகித்தார்.மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சம்சீர் அகமது, மாநாட்டின் முக்கியத்துவம் குறித்தும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு நகர செயலாளர் நந்தகோபால், வரவேற்பு குழு மற்றும் பணிக்குழுக்களை முன்மொழிந்தும் பேசினர்.

குழு தலைவராக சுப்ரமணியம், செயலாளராக ஆறுமுகம், பொருளாளராக சின்னசாமி, துணை தலைவர்களாக விஸ்வநாதன், கவிதா, துணை செயலாளராக ராம் கிருபாகர், ஹரிஹரன் உட்பட, 60 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. மாணவர் சங்க மாவட்ட தலைவர் பிரவீன்குமார், பொருளாளர் கல்வி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு நகர குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com