search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசி பேரூராட்சியில் இயற்கை உரம் விற்பனை தொடக்க விழா
    X

    இயற்கை உரம் விற்பனை தொடங்கிவைத்த காட்சி. 

    அவினாசி பேரூராட்சியில் இயற்கை உரம் விற்பனை தொடக்க விழா

    • அவினாசி பேரூராட்சியில் 18 வார்டுகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
    • 1.50 டன் குப்பைகள் அவினாசியில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் கொண்டு செல்லப்பட்டு உரங்களாக தயாரிக்கப்படுகிறது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் ஓட்டல், பேக்கரி, தள்ளுவண்டி கடைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இவைகளிலிருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் பெறப்படுகிறது.

    தினமும் 11.50 டன்குப்பைகள் அவினாசியில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் கொண்டு செல்லப்பட்டு இயற்கை உரம், மண்புழு உரம் ஆகிய உரங்களாக தயாரிக்கப்படுகிறது. தரமான இந்த உர விற்பனையை அவினாசி பேரூராட்சி அலுவலகம் மற்றும் வளம் மீட்பு பூங்காவில் பேரூராட்சி உதவி இயக்குனர் (பொறுப்பு) கணேசன், அவினாசி பேரூராட்சி தலைவர் பொ. தனலட்சுமி, செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் தொடங்கிவைத்தனர். இது குறித்து பேரூராட்சி தலைவர் பொ. தனலட்சுமி கூறுகையில், வளம் மீட்பு பூங்கா, மற்றும் பேரூராட்சி அலுவலகத்தின் மூலம் உரவிற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் மாடி தோட்டம், வீட்டுத் தோட்டம் மற்றும் விவசாய நிலங்கள் பயன் பெறும் வகையில் மண்புழு உரம் 5 கிலோ 50 ரூபாய், இயற்கை உரம் 10 கிலோ 50 ரூபாய் என பேக்கிங் செய்து விற்பனை செய்யப்படுகிறது.

    பேரூராட்சி அலுவலகம் மற்றும் வளம் மீட்பு பூங்காவில் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இந்த இயற்கை உரத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது என்றார்.

    Next Story
    ×