search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம்  பணிக்கம்பட்டி ஊராட்சியில் ரூ.30  லட்சம் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடங்கள் திறப்பு விழா
    X

    திறப்பு விழாவின் போது குத்துவிளக்கு ஏற்றப்பட்ட காட்சி.

    பல்லடம் பணிக்கம்பட்டி ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடங்கள் திறப்பு விழா

    • ரூ.30.2 லட்சத்தில் 2 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது.
    • காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டடத்தை திறந்து வைத்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னிய கவுண்டம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.இங்கு சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியில் இடப்பற்றாக்குறை இருப்பதால் கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது .

    இதனை ஏற்று குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30.2 லட்சத்தில் 2 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது. கட்டடப் பணிகள் முடிவுற்ற நிலையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டடத்தை திறந்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னியகவுண்டம்பாளையம் பள்ளி கட்டடத்தில் நடைபெற்ற விழாவில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, பணிக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரோஜாமணி ஈஸ்வரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

    இந்த நிகழ்ச்சியில், திமுக., ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி,சோமசுந்தரம்,பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வக்கீல் குமார், பல்லடம் ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்பிரமணியம்,வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன், பொறியாளர் குரு பிரசாத்,துணைத் தலைவர்,ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள், ஒன்றிய திமுக ,நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×