என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
காங்கயம் அருகே சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
- டாஸ்மாக் பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை நடைபெற்றது தெரியவந்தது.
- கைது செய்தவர்களிடமிருந்து 10 மது பாட்டில்கள், ரூ.560ஐ போலீசார் கைப்பற்றினர்
முத்தூர்:
காங்கயம் அருகே நெய்க்காரன்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காங்கயம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காங்கயம் போலீசார் நேற்று காலை காங்கயம் மற்றும் நால்ரோடு பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நெய்க்காரன் பாளையம் அருகே உள்ள டாஸ்மாக் பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த சிவகங்கை மாவட்டம் , என்.புதூர் பகுதியை சேர்ந்த பொன்துரைபாண்டியன் (30) என்பவரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 10 மது பாட்டில்கள், ரூ.560ஐ கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






