பறவைகள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது - இயற்கை ஆர்வலர் பேச்சு

உலக சிட்டுக்குருவிகள் தின கருத்தரங்கு மற்றும் உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது.டெல்லி அரசு சிட்டுகுருவியை தங்களது மாநில பறவையாக அறிவித்துள்ளது.
மாணவ,மாணவியர்களுக்கு சிட்டுக் குருவிகளுக்கான செயற்கை கூட்டை உருவாக்கும் விதம் பற்றி விளக்கும் சக மாணவி.
மாணவ,மாணவியர்களுக்கு சிட்டுக் குருவிகளுக்கான செயற்கை கூட்டை உருவாக்கும் விதம் பற்றி விளக்கும் சக மாணவி.
Published on

திருப்பூர் :

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தின கருத்தரங்கு மற்றும் உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில், நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்,கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக திருப்பூர் இயற்கை கழக பிரதிநிதி ராம்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.அவர் பேசுகையில் :- அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை காக்க உலகம் முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.டெல்லி அரசு சிட்டுகுருவியை தங்களது மாநில பறவையாக அறிவித்துள்ளது.உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் ஒரு சிறிய பறவை. கோடை காலங்களில் பறவைகளுக்கு தினமும் தண்ணீர் வைக்க வேண்டும், குருவிகளுக்கு தண்ணீர் வைப்பது பெருமையல்ல அது நம்முடைய கடமை, மனிதர்கள் இல்லாமல் பறவைகள் வாழும் பறவைகள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது எனறு கூறி சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதற்காக செயற்கை முறையில் கூட்டை எப்படி உருவாக்க வேண்டும், அதன் அளவுகளை எவ்வாறு கணக்கீடு செய்யவேண்டும் என்று கூறினார். பிறகு பறவை ஆர்வலர் கீதாமணி,கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாணவச் செயலர்கள் சுந்தரம்,பூபதி ராஜா, ரமேஷ்,மதுகார்த்திக் ஆகியோர் தலைமையில் 55 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ ,மாணவிகள் கலந்து கொண்டு இயற்கையை காப்பாற்ற சிட்டுக்குருவிகள் அவசியம் என்பதை உணர்ந்து சிட்டுக்குருவி தினத்தன்று அனைவரும் சிட்டுக்குருவிகளை பாதுகாப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com