கோவில் நிகழ்ச்சிகள், திருவிழாக்களை ஒளிபரப்ப யூ-டியூப் சேனல் தொடங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு

யூ-டியூப் சேனல் துவங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதளங்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர் : 

கோவில் நிகழ்ச்சிகள், திருவிழாக்களை பக்தர்கள் பார்க்க வசதியாக யூ-டியூப் சேனல் துவங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

கோவில்கள், ஆதீன மடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள், விழாக்கள், ஆன்மிக நிகழ்ச்சிகளை பக்தர்களிடம் சேர்க்க சமூக வலைதளங்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன.கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள், சிறப்புபூஜைகள், திருவிழா நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க வசதியாகவும், நேரடியாக ஒளிபரப்பவும் கோவில் பெயரில் யூ - டியூப் சேனல்கள்துவக்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக, பெரிய கோவில்களில் துவங்கப்படும். அதன்பின், அனைத்து முக்கிய கோவில்களுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்கின்றனர் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com