மங்கலம் அருகே பாம்பு கடித்து சிறுமி சாவு

சைந்தவி விளையாடிக்கொண்டிருந்த போது அவரை ஒரு பாம்பு கடித்துள்ளது. சைந்தவியை பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

மங்கலம் :

திருப்பூர் பூமலூர் நடுவேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 36). இவருடைய மனைவி தங்கமணி (30). இவர்களுக்கு மதியழகி (12), சைந்தவி (6) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

நேற்று சைந்தவி நடுவேலம்பாளையம் ஓம்சக்தி கோவில் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது அவரை ஒரு பாம்பு கடித்துள்ளது. பின்னர் அக்கம்பக்கத்தினர் சைந்தவியை பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சைந்தவியை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரேத பரிசோதனையில் சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com