என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
திருப்பூரில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது
- பிற்பகல் 3 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
- எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டமானது 15.6.2023 (வியாழக்கிழமை) அன்று பிற்பகல்3மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் நடைபெறஉள்ளது.
கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.எனவே கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் புகார்கள், குறைபாடுகள் இருப்பின் தங்களது எரிவாயு இணைப்பு புத்தகம்அல்லது அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
Next Story






