பெண் தொழிலாளி தற்கொலை

கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.ஜூஸ் பாட்டிலில் விஷம் கலந்து குடித்து படுக்கையில் மூக்கு, வாயில் நுரைதள்ளியபடி இறந்து கிடந்துள்ளார்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

அவினாசி :

கேரள மாநிலத்தை சேர்ந்த அவுசேக் மகன் பிஜு (வயது 42). இவரது மனைவி கவிதா (32). இவர்கள் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். கவிதா அவினாசி கஸ்தூரிபாய் வீதியில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 15ந் தேதி இரவு அதே பகுதியில் ஒரு நபருடன் பேசிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார் .மறுநாள் காலை 10 மணிவரை வெளியே வரா ததால் அக்க ம்பக்கத்தினர் சந்தேகப்பட்டு ஜன்னல் வழியே பார்த்தபோது ஜூஸ்பா ட்டிலில் விஷம் கலந்து குடித்து படுக்கையில் மூக்கு, வாயில் நுரைதள்ளிய படி இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து கவிதா தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com