என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள்
- தென்மேற்கு பருவமழை குறைந்தால் பயிர் சாகுபடி பரப்பும் குறைந்துள்ளது.
- சோளம் உள்ளிட்ட பயிர் இடுவதற்கு ஏதுவாக அமையும். சிறு விவசாயிகள், மழையை எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்
உடுமலை:
தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை மாதங்களில் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் பரவலாக மழை பெய்யும். இதனை நம்பி விவசாயிகள் காய்கறி மற்றும் பயிர் சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.இம்முறை சரியான நேரத்தில் பருவமழை பெய்யவில்லை. இதனால் பயிர் சாகுபடி பரப்பும் குறைந்துள்ளது.
விவசாயிகள் கூறுகையில், தென்மேற்கு பருவமழை முடிந்து வட கிழக்கு பருவமழை துவங்கவும் உள்ளது. அவ்வப்போது மழையின் தாக்கம் இருந்தால் மட்டுமே விவசாய நிலம் இளகும். தொடர்ந்து சோளம் உள்ளிட்ட பயிர் இடுவதற்கு ஏதுவாக அமையும். சிறு விவசாயிகள், மழையை எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர் என்றனர்.
Next Story






