search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இ- சேவை மையங்கள் இயங்கும் நேரம் நீட்டிப்பு
    X

    கோப்புபடம்

    இ- சேவை மையங்கள் இயங்கும் நேரம் நீட்டிப்பு

    வழக்கமாக காலை 10 மணி முதல் மாலை, 5:45 மணி வரை இம்மையங்கள் இயக்கப்படும்.

    திருப்பூர்:

    டி.என்.பி.எஸ்.சி.,குரூப்- 2, குரூப் 2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றோர் தங்களது சான்றிதழ்களை இ-சேவை வாயிலாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். வருகிற 15ந் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டியுள்ளது.

    இதையடுத்து அரசு கேபிள் டி.வி., நிறுவன கட்டுப்பாட்டில் உள்ள இ-சேவை மையங்களின் தினசரி செயல்படும் நேரம் தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் 9 தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகங்கள் என அரசு கேபிள் டி.வி., நிறுவன கட்டுப்பாட்டில் 14 இ-சேவை மையங்கள் இயங்குகின்றன. வழக்கமாக காலை 10 மணி முதல் மாலை, 5:45 மணி வரை இம்மையங்கள் இயக்கப்படும்.குரூப் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றோர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளதால் இம்மையங்கள் வருகிற 16ந் தேதி வரை காலை 8மணி முதல் இரவு, 9 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×