search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
    X

    கோப்புபடம்

    முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

    • சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.
    • ரூ.54,000 கல்வி உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    திருப்பூர்:

    முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் சுயதொழில் முனைவோருக்கான கருத்தரங்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.இதில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சுயதொழில் முனைவோருக்கான கருத்தரங்கு வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் சுயதொழில் முனைவோருக்கான கருத்தரங்கு நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் சென்ற காலாண்டில் பெற்ற மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவரிக்கப்பட்டது. மேலும் கல்வி உதவித்தொகை, குடும்ப ஓய்வூதியம், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மொத்தம் 21 மனுக்கள் பெறப்பட்டது.

    இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் படைவீரர்களின் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது என்றார்.

    அதனைத்தொடர்ந்து இக்கூட்டத்தில் 3 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கு ரூ.54,000 கல்வி உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், உதவி இயக்குநர் (பொ) (முன்னாள் படைவீரர் நலம்) வெங்கட்ராமன், பொதுமேலாளர் (மாவட்டதொழில் மையம்) ராமலிங்கம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ், மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரஞ்சித்குமார், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்கள், படைவீரர் மற்றும் குடும்பத்தினர், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×