108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர், மருத்துவ உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு முகாம் தாராபுரத்தில் நாளை நடக்கிறது

தாராபுரம் ஐ.டி.ஐ. கார்னரில் உள்ள 108 ஆம்புலன்சு கட்டிடத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் அவசர கால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) தாராபுரம் ஐ.டி.ஐ. கார்னரில் உள்ள 108 ஆம்புலன்சு கட்டிடத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. வாகன ஓட்டுனருக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும். 24 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிய ஆவணங்களை சரிபார்ப்புக்கு கொண்டு வர வேண்டும்.

மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்சி.நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி. படிப்புகளை 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். பி.எஸ்சி. விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பையாலஜி படித்திருக்க வேண்டும். 19 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பகல் மற்றும் இரவு நேரங்களில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com