விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

அக்கம்- பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.டாக்டர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் லட்சுமி(வயது 72). இவர் அவரது மகள் கலாமணியுடன் வசித்து வந்தார். இதற்கிடையே சம்பவத்தன்று வேலைக்குச் சென்ற கலாமணி வேலை முடிந்து வீடு திரும்பிய போது, அவரது தாயார் லட்சுமி வாயில் நுரை தள்ளியபடி வீட்டிற்குள் கிடந்துள்ளார். இதனால் அலறி துடித்த அவர், அக்கம்- பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து கலாமணி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com