அவினாசியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் கோபி பழனியப்பன் தலைமை தாங்கினார்.பல்லடத்தில் கொலை செய்யப்பட்ட 4பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்க வேண்டும் என கூறினர்.
செயற்குழு கூட்டம் நடைபெற்றக் காட்சி.
செயற்குழு கூட்டம் நடைபெற்றக் காட்சி.
Published on

அவினாசி:

திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம் அவினாசியில் உள்ள ஒரு அரங்கில் நடந்தது. வடக்கு மாவட்ட தலைவர் கோபி பழனியப்பன் தலைமை தாங்கினார். மேற்கு வட்டார தலைவர் கொங்கு தங்கமுத்து, வடக்கு வட்டாரத்தலைவர் லட்சுமணசாமி, கிழக்கு வட்டாரத்தலைவர் குமாரசாமி, அவினாசி நகர தலைவர் பொண்ணு குட்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மகாலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பூத்கமிட்டி புதுப்பிப்பது, வட்டாரத்தலைவர்கள் நகரத்தலைவர்கள் இல்லத்திலேயே காங்கிரஸ் பேரியக்க மூவர்ணக்கொடிகளை பறக்க விடுவது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் விதமாக அனைத்து வட்டார நகர தலைவர்களும் தங்களது கமிட்டிகளை உடனடியாக அமைப்பது.

அந்தந்த வட்டாரத்திற்குட்பட்ட கூட்டுறவு சங்கங்களில் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்த்து தேர்தலில் போட்டியிட முயற்சித்தல், வட்டார, நகரத்திற்குட்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியின் அசையா சொத்துக்கள் இருப்பின் அதை மீட்டெடுக்க மாவட்ட கமிட்டிக்கு தகவல் தெரிவித்தல், தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்களில் இறைப்பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கு விண்ணப்பித்தல், பல்லடத்தில் கொலை செய்யப்பட்ட 4பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com