தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் - காமாட்சிபுரி சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பேட்டி

நவகிரக கோட்டை சிவன் ஆலயத்தில் மழை வேண்டி 108 திருவிளக்கு பூஜை, 108 சங்காபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.மதுபானத்தால் இளைஞா்கள் குடித்து தங்களது வாழ வேண்டிய வாழ்க்கையை தொலைத்து கொண்டு உள்ளனா்.
கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வரசுவாமிகள்.
கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வரசுவாமிகள்.
Published on

பல்லடம் :

பல்லடம் சித்தம்பலம் கிராமத்தில் சிவபெருமானை மையமாக கொண்டு 27 நட்சத்திரங்கள், 9 அதி தேவதைகள், 9 நவகிரகங்கள்,108 சிவலிங்கங்கள், நவகிரக கணபதி உள்ளடங்கிய நவகிரக கோட்டை சிவன் ஆலயத்தில் மழை வேண்டி 108 திருவிளக்கு பூஜை, 108 சங்காபிஷேகம், சோபகிருது ஆண்டு விழா, வருண மகா மந்திர வேள்வி, சிவநாம பஜனை ஆகியவை நடைபெற்றன. இவ்விழாவில் கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வரசுவாமிகள் அருளுரை நிகழ்த்தினாா்.

அதன் பின்னா் அவா் நிருபர்களிடம் கூறுகையில்-:தமிழகம் பல்வேறு துறைகளில் சிறந்த மாநிலமாக நாட்டுக்கே முன்மாதிரியாக திகழ்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயம் தமிழகத்தில் மதுபானத்தால் இளைஞா்கள் குடித்து தங்களது வாழ வேண்டிய வாழ்க்கையை தொலைத்து கொண்டு உள்ளனா். எதிா்கால தலைமுறையை கவனத்தில் கொண்டு தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். திராவிட பேரரசாக திகழும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நினைத்தால் இதனையும் செயல்படுத்தி காட்ட முடியும் என்றாா். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com