search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வனவிலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தி திருப்பூரில் கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி
    X

    வனவிலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தி முகமூடி அணிந்து, மனித சங்கிலி அமைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி.

    வனவிலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தி திருப்பூரில் கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி

    • மார்ச் 3-ந் தேதி உலக வனவிலங்கு தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • பறவைகளும், விலங்குகளும் மனிதன் தோன்றுவதற்கு முன்பே இந்த பூமியில் தோன்றியுள்ளது.

    திருப்பூர் :

    உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி சார்பாக இன்று கல்லூரி முன்பு வனவிலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தி முகமூடி அணிந்தும், மனித சங்கிலி அமைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    வனச்சரக அலுவலர் சுரேஷ்கிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். வனச்சரக அலுவலர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3-ந் தேதி உலக வனவிலங்கு தினம் அனுசரிக்கப்படுகிறது. இது பூமியில் உள்ள விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், உலகின் காட்டு விலங்கினங்கள் மற்றும் தாவரங்களைப் பற்றிய விழிப்புணர்வை கொண்டாடுவதும் வளர்ப்பதும் இந்த நாளின் நோக்கம். பறவைகளும், விலங்குகளும் மனிதன் தோன்றுவதற்கு முன்பே இந்த பூமியில் தோன்றியுள்ளது. அவைகள் மனிதனை நம்பி வாழ்வது இல்லை.மனிதர்கள் தான் அவைகளை நம்பி வாழவேண்டும். ஆகையால் வன உயிரினங்களை பாதுகாப்பது நமது கடமை. மேலும் அவற்றை பாதுகாக்கும் வழிமுறைகளை பற்றி கூறினார். கல்லூரி மாணவ மாணவிகள் வனவிலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தி முகமூடி அணிந்தும், மனித சங்கிலி அமைத்தும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    Next Story
    ×