திருப்பூர் மாநகராட்சி 7-வது வார்டில் தார்ச்சாலை அமைக்க பூமி பூஜை எம்.எல்.ஏ., மேயர் தொடங்கி வைத்தனர்

ரூ.57½ லட்சம் மதிப்பில் தார் தளம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.தென்றல் நகர் முதல் அபிராமி கார்டன் வரை தார் தளம் அமைக்கப்படுகிறது.
தார் தளம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்ற காட்சி.
தார் தளம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்ற காட்சி.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி 47-வது வார்டு தென்றல் நகர் முதல் அபிராமி கார்டன் வரை மெயின் ரோட்டில் ரூ.57½ லட்சம் மதிப்பில் தார் தளம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பூமி பூஜையில் திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், ஜெயசுதா பூபதி, உதவி ஆணையாளர் வாசுகுமார், வட்ட செயலாளர்கள் வெங்கட்ராஜா, பத்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com