ஊத்துக்குளி அருகே புதிய ரேஷன் கடை கட்ட அடிக்கல் நாட்டு விழா

செம்பாவள்ளத்தில் சுமார் 350- க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.ஊத்துக்குளி ஆர்.எஸ்.நியாய விலைக் கடையில் ரேஷன் பொருட்கள் வாங்கி பயன் பெற்று வருகிறார்கள்.
புதிய ரேஷன் கடை கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற காட்சி.
புதிய ரேஷன் கடை கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற காட்சி.
Published on

பெருமாநல்லூர் :

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியம், மொரட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட செம்பா வள்ளத்தில் சுமார் 350- க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்கள் தற்போது 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊத்துக்குளி ஆர்.எஸ்.நியாய விலைக் கடையில் ரேஷன் பொருட்கள் வாங்கி பயன் பெற்று வருகிறார்கள். ஆகவே இப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் ஒரு ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என்று ஊராட்சித் தலைவர் என்.பிரபுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தலைவர் பிரபு ரூ.4,80,000 மதிப்பீட்டில் பகுதி நேர புதிய ரேஷன் கடை கட்ட உத்தரவிட்டார்.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் ஊராட்சி தலைவர் பிரபு, ஊராட்சி செயலாளர் சாமிநாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர் கலைவாணி தங்கராஜ், செம்பாவள்ளம் பட்டக்காரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com