search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசி கோவில் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - இந்து முன்னணி வலியுறுத்தல்
    X

    திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.

    அவினாசி கோவில் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - இந்து முன்னணி வலியுறுத்தல்

    • சிவன் ஆலயத்தில் கடந்த 1990ம் ஆண்டு ஒரு சம்பவம் நடைபெற்றது.
    • வரும் ஜூலை 30 ந் தேதி இந்து முன்னணி சார்பில் அவிநாசியில் மாநாடு நடத்தப்படவுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் இந்து முன்னணி அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் மாநில செயலாளர் தாமு வெங்கடேசன் முன்னிலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பின்னர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாள ர்களிடம் கூறியதாவது :- தி.மு.க. இந்து விரோத கட்சியாக செயல்படுகிறது. இந்து கோயில்களை இடிக்க முயல்கிறது. புண்ணிய தலமாக அவிநாசி விளங்குகிறது. அங்குள்ள சிவன் ஆலயத்தில் கடந்த 1990ம் ஆண்டு ஒரு சம்பவம் நடைபெற்றது. யாரோ பீடி பிடித்து வீசி தான் தீவிபத்து நிகழ்ந்தது என்றனர். அதன் பின்னர் 2000ம் ஆண்டில் தற்கொலை நடைபெற்ற போது அங்கு ஒரு பைபிள் கிடந்தது. அவர் மனநோயாளி என்று சொல்லி முடித்து விட்டனர். தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்று ள்ளது. இதனையும் பைத்தியக்காரன் என்று சொல்லி முடிக்கின்றனர். தொடர்ந்து அவிநாசி கோயிலில் இது போன்ற விரும்பதகாத சம்பவங்கள் நடைபெற்று வருவதை விசாரிக்க சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் ஜூலை 30 ந்தேதி இந்து முன்னணி சார்பில் அவிநாசியில் மாநாடு நடத்தப்படவுள்ளது. பட்டினபிரவேசம் என்பது பல நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் வைபவம். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்றது. மதம் சார்ந்த நம்பிக்கைகளில் மதசார்பின்மை கொள்கை கொண்ட அரசியல் கட்சிகள் தலையிடுவது கூடாது. இந்து மதத்திற்கு என்று பல நூற்றாண்டு வழிபாட்டு மரபு , நடைமுறைகள் உள்ளன. இந்து கோயில்களில் அரசியல்வாதிகள் தலையீடு கூடாது.

    கடவுள் பக்தி நம்பிக்கையுடையவர்களை தான் கோயில்களுக்கும் செயல்அலுவல ர்களாகவும், அறங்காவலர்க ளாகவும் நியமனம் செய்ய வேண்டும். இந்து கோயில் வருமானம் அனைத்தும் இந்து கோயில்களுக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்றார். மாவட்ட செயலாளர்கள் லோகநாதன், சர்வேஸ்வரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×