search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை 4-ந்தேதி தொடக்கம்
    X

    கோப்புபடம்

    உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை 4-ந்தேதி தொடக்கம்

    • அரசு நிர்ணயித்துள்ளஆதார விலை ஒரு டன்னுக்கு ரூ. 2,823.25, மாநில அரசு ஊக்கத்தொகை ரூ.195 என ரூ. 3,018.25 வழங்கப்படுகிறது.
    • சர்க்கரை உற்பத்தியும் பெருமளவு பாதிக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவித்து வந்தனர்.

    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு கட்டுப்பாட்டு பகுதிகளாக திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், தாராபுரம், திண்டுக்கல் மாவட்டம் பழனி, நெய்க்காரபட்டி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.நடப்பாண்டு அரவைக்கு 664 விவசாயிகளிடம் கட்டை கரும்பு 1,727 ஏக்கர், கன்னி கரும்பு 457 ஏக்கர் என 2,184 ஏக்கர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் மதுரை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை கட்டுப்பாட்டு பகுதி விவசாயிகளிடம் இருந்து 10 ஆயிரம் டன் கரும்பு என நடப்பாண்டு ஒரு லட்சத்து ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ளஆதார விலை ஒரு டன்னுக்கு ரூ. 2,823.25 , மாநில அரசு ஊக்கத்தொகை ரூ.195 என ரூ. 3,018.25 வழங்கப்படுகிறது.

    நடப்பாண்டு கரும்பு அரவை துவக்குவதற்காக ஆலையிலுள்ள பாய்லர்கள் இளஞ்சூடு ஏற்றும் விழா, கடந்த 10ந்தேதி நடந்தது. கடந்த 21-ந்தேதி முதல் ஆலையில் கரும்பு அரவை துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆலை பராமரிப்பு பணிகள் இழுபறி காரணமாக அரவை துவக்கம், சர்க்கரை உற்பத்தி பணி இழுபறியானது.

    கரும்பு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.குறிப்பிட்ட காலத்தில் அறுவடை செய்யாவிட்டால் எடை இழப்பு ஏற்படும். சர்க்கரை உற்பத்தியும் பெருமளவு பாதிக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் ஆலை பராமரிப்பு பணிகள் குறித்து, சென்னை சர்க்கரை துறை கமிஷனர் அலுவலக தொழில்நுட்ப அலுவலர்கள் ரவிச்சந்திரன், பிரபாகரன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.இதில் கரும்பு சாற்றிலிருந்து சர்க்கரை தயாரிக்கும் பிரிவில் கசிவு உள்ளிட்ட பிரச்சினை உள்ளதும், அதனை உடனடியாக சரி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

    இது குறித்து மேலாண் இயக்குனர் சண்முகநாதன் கூறுகையில், ஆலையில் உள்ள சர்க்கரை உற்பத்தி பிரிவு எந்திரத்திலுள்ள பழுது சரி செய்ய 3 நாட்களாகும்.அப்பணிகளும் விரைந்து முடித்து வருகிற 4-ந் தேதி முதல் ஆலையில் கரும்பு அரவை துவங்கும் என்றார்.

    Next Story
    ×