மங்கலம் அருகே பாறைக்குழியில் தவறி விழுந்து முதியவா் பலி

தங்கவேலுக்கு கண்பாா்வை குறைபாடு மற்றும் உடல்நலக்குறைபாடு இருந்து வந்ததாக தெரிகிறது.மங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

மங்கலம் :

திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே உள்ள கிடாத்துறைப்புதூரை சோ்ந்தவா் தங்கவேல் ( வயது 80). இவருக்கு கண்பாா்வை குறைபாடு மற்றும் உடல்நலக்குறைபாடு இருந்து வந்ததாக தெரிகிறது.இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற தங்கவேல் அதன் பின் வீடு திரும்பவில்லையாம்.

இதையடுத்து, உறவினா்கள் தேடியபோது அந்தப் பகுதியில் உள்ள பாறைக்குழியில் தங்கவேல் இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும் தங்கவேல் பாறைக்குழியில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். 

X

Maalai Malar
www.maalaimalar.com