search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ் திறனாய்வு தேர்வு திருப்பூர் பள்ளி மாணவிகள் சாதனை
    X

    கோப்புபடம்.

    தமிழ் திறனாய்வு தேர்வு திருப்பூர் பள்ளி மாணவிகள் சாதனை

    • ஆசிரியரின் உதவியுடன் நன்றாக பயிற்சி செய்ததால் தேர்வில் வெற்றியடைய முடிந்தது
    • இரு ஆண்டுக்கு உதவித்தொகை கிடைப்பதால் உதவியாக இருக்கும் என்றார்.

    திருப்பூர் :

    பிளஸ் 2 வகுப்புகளில் அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கும் தமிழ் மொழி திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது.அதில் 10-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தின் அடிப்படையில் அனைத்து வினாக்களும் கேட்கப்பட்டன. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அனைவருக்கும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் 2 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் 1,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    தமிழ்மொழி திறனாய்வுத் தேர்வின் முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதில் 2.50 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் இவர்கள் அனைவருக்கும் தலா 1,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கருவலூர் அரசு பள்ளி மாணவி தமிழ்ச்செல்வி 89 மதிப்பெண் பெற்றும், இதே பள்ளியை சேர்ந்த செல்வி ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர். இதுதவிர மாவட்ட அரசு பள்ளி அளவில் தமிழ்ச்செல்வி முதலிடம் பிடித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் உடுமலை லூர்து மாதா மெட்ரிக் பள்ளி மாணவி நேத்ரா 96 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாமிடத்தில் உள்ளார்.

    மாநில அளவில் தேர்வான, தமிழ்ச்செல்வியை, கருவலூர் பள்ளி தலைமை ஆசிரியர் சத்யபாமா, உதவி தலைமை ஆசிரியர் பிரபாவதி, தமிழாசிரியர் ஆனந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    மாணவி தமிழ்ச்செல்வி கூறுகையில், தமிழ் பாடம் மிகவும் பிடித்த பாடம். ஆசிரியரின் உதவியுடன் நன்றாக பயிற்சி செய்ததால் தேர்வில் வெற்றியடைய முடிந்தது. வெற்றி பெற்றது மகிழ்ச்சி. தொடர்ந்து இரு ஆண்டுக்கு உதவித்தொகை கிடைப்பதால் உதவியாக இருக்கும் என்றார்.

    Next Story
    ×