வெள்ளகோவிலில் வாகனத்தில் சேலை சிக்கி கீழே விழுந்த பெண் சாவு

ஈஸ்வரியின் சேலை எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் பின் டயரில் சிக்கியது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் காமராஜபுரத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி.கூலி தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி (வயது 56). சம்பவத்தன்று வெள்ளகோவில் -தாராபுரம் ரோட்டில் சேரன் நகர் அருகே கணவன்- மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். பின்னால் அமர்ந்திருந்த ஈஸ்வரியின் சேலை எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் பின் டயரில் சிக்கியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஈஸ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com