பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 638 மனுக்கள் பெறப்பட்டன - உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக கலெக்டரை சந்தித்து வழங்கினர்.
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் வினித் மனுக்களை வாங்கிய போது எடுத்த படம்.
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் வினித் மனுக்களை வாங்கிய போது எடுத்த படம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் சாலை வசதி, குடிநீா் வசதி, முதியோா் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுவாக கொடுத்து வருகின்றனர்.

நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் திருப்பூர் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக கலெக்டரை சந்தித்து வழங்கினர். அதன்படி நேற்று ஒரே நாளில் மட்டும் 638 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் அறிவுத்தினாா். முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், சாா் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய்நாராயணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X

Maalai Malar
www.maalaimalar.com