வெள்ளகோவிலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது

வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் போலீசார் குற்றச்சம்பவங்களை கண்காணித்து வாகன தணிக்கையிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.நாச்சிப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நூல் மில் பின்புறம் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 3 பேரை கைது செய்தனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் போலீசார் புகையிலை, கஞ்சா, பணம் வைத்து சூதாட்டம்,சேவல் சண்டை, அனுமதியின்றி மது விற்பனை போன்ற குற்றச்சம்பவங்களை கண்காணித்து வாகன தணிக்கையிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

நேற்று வெள்ளகோவில் அருகே உள்ள நாச்சிபாளையம் என்ற பகுதியில் வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அர்ஜுனன் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது நாச்சிப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நூல் மில் பின்புறம் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த முத்துசாமி (53), நல்லசிவம் (35), ரவிக்குமார் (42) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.230 ரொக்கத்தை கைப்பற்றினர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com