search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1.62 லட்சத்திற்கு கொப்பரைகள் விற்பனை
    X

    கோப்புபடம்.

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1.62 லட்சத்திற்கு கொப்பரைகள் விற்பனை

    • கொப்பரை கிலோ ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனையானது.
    • நிலக்கடலை ஏலத்தில் ரூ.4.80 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

    காங்கயம் :

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். திருப்பூா், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று கொப்பரைகளை கொள்முதல் செய்கின்றனா்.இந்நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த 10 விவசாயிகள் 2,071 கிலோ கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். கொப்பரை கிலோ ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனையானது. மொத்தமாக ரூ.1.62 லட்சத்துக்கு கொப்பரைகள் விற்பனையாயின. இத்தகவலை காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ராமன் தெரிவித்துள்ளாா்.

    சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் அருகிலுள்ள கிராமங்களை சோ்ந்த விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருள்களை விற்பனை செய்து வருகின்றனா். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று பொருள்களை கொள்முதல் செய்கின்றனா்.

    இந்நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.4.80 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது. இதில் குவிண்டால் ஒன்றுக்கு முதல்ரக நிலக்கடலை ரூ.7,300 முதல் ரூ.7,600 வரையிலும், இரண்டாம் ரகம் ரூ.7,000 முதல் ரூ.7,300 வரையிலும், மூன்றாவது ரகம் ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும் விற்பனையானது.

    Next Story
    ×