மது கடத்திய வாலிபர் கைது

ரோந்து பணியின் போது சிக்கினார். 2 பைகளில் வைத்திருந்த மது பறிமுதல்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப்-இன்ஸ்பெக்டர்கள் முனிரத்தினம், ரவி மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகே சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.

தொடர்ந்து விசாரணை செய்ததில் ஆந்திரா மாநிலம் சித்தூர் சில்லகுண்டலப்பள்ளி பகுதியை சேர்ந்த ராம்ராஜிவ் (வயது 30) என தெரிய வந்தது.

மேலும் இவரது உடமைகளை சோதனை செய்த போது 180 கொள்ளளவு கொண்ட கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை 2 பைகளில் வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலிசார் ராம்ராஜிவ் மீது கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை கடத்தியதாக வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com