2 குழந்தைகளுடன் பெண் மாயம்

வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பதை கண்டித்தார் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை
2 குழந்தைகளுடன் பெண் மாயம்
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அருகே பழைய ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 31). இவர் பக்கிரிதக்கா பகுதியில் உள்ள ஊது பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கு திருமணம் ஆகி ஷாமிலா (வயது 26) என்கின்ற மனைவியும் தியாஸ்ரீ (வயது 5), ஜெயசுகன் (வயது 1½) ஆகிய 2 குழந்தைகள் உள்ளன.

அப்போது நேற்று முன்தினம் இரவு கார்த்திக் மனைவி வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பதை கண்டித்தார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை காணவில்லை.

இதனால் கார்த்திக் தனது உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

இதனால் கார்த்திக் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தாய் மற்றும் 2 குழந்தைகளை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com