என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு வார விழா நடந்தது
    X

    திருப்பத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு சிறந்த சங்கத்திற்கான விருதை கலெக்டர் அமர்குஷ்வாஹா, சி.என்.அண்ணாதுரை எம்.பி. தலைவர் ராஜாவிடம் வழங்கிய போது எடுத்த படம். 

    திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு வார விழா நடந்தது

    • சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம்
    • கலெக்டர், சி.என்.அண்ணாதுரை எம்.பி வழங்கினர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட அளவிலான 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருப்பத்தூர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சி.பெ.முருகேசன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக இணைப்பதிவாளர், முதுநிலை மண்டல மேலாளர் திருகுண ஐயப்பதுரை உறுதிமொழி வாசித்தார்.

    வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குநர் வ.சி.கோமதி திட்ட விளக்கவுரை ஆற்றினார்.

    விழாவில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 1,625 விவசாயிகளுக்கு ரூ.11 கோடியே 80 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பில் விவசாய கடனுதவியும், கால்நடை பராமரிப்பிற்கு 489 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 77 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் கடனுதவியும், மகளிர் சுயஉதவிக்குழுக்கடன் 72 குழுக்களுக்கு ரூ.3 கோடியே 25 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் கடனுதவியும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.50 லட்சம் கடனுதவியும், தாட்கோவின் மூலமாக 2 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் கடனுதவியும், 2 பயனாளிகளுக்கு டாப்செட்கோ ரூ.2 லட்சம் மதிப்பில் கடனதவிகள் என மொத்தம் 2,200 பயனாளிகளுக்கு ரூ.16 கோடியே 97 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிகளையும், சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு கேடயங்களையும் கலெக்டர் அமர்குஷ்வாஹா, சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் வழங்கி பேசினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், துணைப்பதிவாளர்கள் சம்பத், சுவாதி, கூட்டுறவு சார்பதிவாளர்கள் மோகன், ரவிசந்திரன், தர்மேந்திரன், பூவண்ணன், சண்முகம், பிரபாகரன், ராமசந்திரன், செந்தில், சென்னம்மாள், திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய எஸ்.தண்டபாணி, நகரமன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், ஒன்றியக்குழு தலைவர்கள் விஜயா, சத்யா, சங்கீதா பாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைபதிவாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    Next Story
    ×