கஞ்சா விற்ற வாலிபர் கைது

1 கிலோ சிக்கியது மேலும் ஒருவரை பிடிக்க தீவிரம்
கஞ்சா விற்ற வாலிபர் கைது
Published on

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் காதர் கான் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஜோலார்பேட்டை ரெயில்வே மைதானம் அருகே சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். இதில் ஒரு வாலிபர் மட்டும் பிடிபட்டார். மற்றொரு வாலிபர் தப்பி ஓடி விட்டார்.

இதனையெடுத்து பிடிபட்ட வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியை குணா என்கிற குணசேகரன் (வயது 29) என்பதும், தப்பி ஓடிய வாலிபர் அதே பகுதி சேர்ந்த வினோத் (29) என்பதும் தெரியவந்தது.இவர்கள் இருவரும் விற்பனை செய்ய ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் குணா என்கிற குணசேகரனை கைது செய்து அவரிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய வினோத்தை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com