இலவச வீட்டு மனைகள் கேட்டு சப்-கலெக்டர் அலுவலகம் முற்றுகை

பொதுமக்கள் தர்ணா-பரபரப்பு ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி
இலவச வீட்டு மனைகள் கேட்டு சப்-கலெக்டர் அலுவலகம் முற்றுகை
Published on

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம்,, வாணியம்பாடி நூருல்லாபேட்டை பகுதியில் பொதுமக்கள், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டி வாழ்ந்து வந்தனர். நீர்பிடிப்பு பகுதியான ஏரி கால்வாயில் அவர்கள் வீடுகள் கட்டி உள்ளதால், மழை நீர் ஏரிக்கு செல்ல முடியாத சூழல் நிலவியது. மேலும் மழை நீர் செல்ல வழி இல்லாமல் அரசு ஆஸ்பத்திரி மற்றும் சாலைகளில் குளம்போல் தேங்கி நிற்கும் நிலை நீடித்தது.

இதில் கடந்த 2022-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 20-ந் தேதி நீதிமன்ற உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம், ஏரி கால்வாய் ஆக்ரமித்து கட்டப்பட்டு இருந்த 47 வீடுகளை இடித்து அகற்றினர்.

இதில் வீடுகளை இழுந்த 47 குடும்பங்களில் 6 பேருக்கு மட்டும் இலவச வீட்டு மனைகள் வழங்கப்ப ட்டுள்ளது.

மிதமுள்ள 41 குடும்பத்தினர்கள் இலவச வீட்டு மனை வழங்க கோரி அரசு அதிகாரிகளிடம் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதுநாள் வரை அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட வில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று வாணியம்பாடி சப்- கலெக்டர் அலுவ லகத்தை முற்றுகையிட்டனர். மேலும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என கூறி, அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த சப்- கலெக்டர் பிரேமலதா விரைந்த சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஒரு மாதத்திற்குள் இலவச வீட்டு மனைகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com