ரெயில் பயணிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு

குழந்தை கடத்தல், பாலியல் சீண்டல் குறித்து விளக்கம் உதவி எண் 1512 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுரை
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போது எடுத்த படம்
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போது எடுத்த படம்
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே போலீஸ் நிலையம் சார்பில் ரெயில் பயணிகளுக்கு குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் சீண்டல் குறித்து ரயில் நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் பயணிக்கும் பயணிகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் ரெயில்கள் மற்றும் பிளாட்பாரங்களில் உறங்கும் போதும் அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் ரீதியாக சீண்டல்களை ஏற்படுத்தும் நபர்கள் மீது நீங்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம்

இதற்காக ரெயில்வே நிர்வாகம் காவல் உதவி எண் 1512 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் ஓடும் ரெயில்களில் அல்லது பிளாட்பாரங்களில் இருக்கும் போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை மேற்கொளப்படும்.

அதே போன்று குழந்தை கடத்துதல், குழந்தை மாயமானதல், ரெயில்கள் மற்றும் பிளாட்பாரங்களில் தவறி விழந்து விடுதல் போன்ற தகவல்கள் தெரிவிக்க குழந்தை உதவி எண்:1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com