search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
    X

    நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

    • பஸ்களை சிறை பிடித்தனர்
    • தாசில்தார் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்

    திருப்பத்தூர்:

    தமிழகம் முழுவதும் நீர்நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் தண்டபாணி கோவில், சிவராஜ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இதனிடையே அந்த பகுதிகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 3 தலைமுறைகளாக வசித்து வருவதாக கூறப்படும் நிலையில், நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி துவங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதால் இடிப்பு பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் இன்று ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி நடைபெற உள்ளதாக நேற்றைய தினம் நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை பொக்லைன் எந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நீர்வளத்துறை சார்பில் நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயற்சி செய்தனர்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட மக்கள் திருப்பத்தூர்-பொன்னியம்மன் கோயில் சாலை பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் சாலை செல்லும் சாலையில் அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் கோட்டாட்சியர் லட்சுமி, தாசில்தார் சிவப்பிரகாசம் பேச்சுவார்த்தை நடத்தி 10, நாட்கள் அவகாசம் அளிப்பதாக உறுதி அளித்ததன் பேரில் 2 மணி நேரம் சாலை மறியலை அப்பகுதி மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

    மேலும் நேற்று இரவு இதே கோரிக்கை முன்வைத்து நல்லதம்பி எம்எல்ஏ வீடு மற்றும் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டும வீடுகளை இடிக்க கூடாது என கோரிக்கைகளை வைத்தனர்.

    பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×