search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரில் கடத்திய 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்
    X

    காரில் கடத்திய 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்

    • 10 கி.மீ. விரட்டி சென்று அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்
    • நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைப்பு

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே ஆந்திரா மாநிலத்திற்கு காரில் ரேசன் அரிசி கடத்துவதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர் சுதாகர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்திய போது நிற்காமல் சென்றது இதனால் அந்த வாகனத்தை வருவாய் துறையினர் பணியாண்டப்பள்ளி பகுதியில் இருந்து மூக்கனூர் வழியாக ஒரு வழி பாதையில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவு வரை துரத்தினர். அப்போது நாட்டறம்பள்ளி அருகே சண்டியூர் பகுதியில் காரை மடக்கி பிடித்த போது டிரைவர் காரை நிறுத்தி விட்டு சினிமா பாணியில் ரேசன் கடத்தும் கும்பல் டிரைவரை காப்பாற்ற பின் தொடர்ந்து வந்து மற்றொரு காரில் ஏறி தப்பி ஓடிவிட்டார்.

    அதன் பிறகு காரை சோதனை செய்ததில் 20 மூட்டைகளில் சுமார் ஒரு டன் ரேசன் இருப்பது தெரிய வந்தது இதனை அடுத்து வருவாய் துறையினர் சுமார் 1 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்து காரை பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். பின் வாகனத்தை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படை த்தனர் நாட்டறம்பள்ளி பகுதியில் சினிமா பாணியில் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மடக்கி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×