சாராயம் விற்ற 2 பேருக்கு ஜெயில்

70 லிட்டர் பறிமுதல் போலீசார் வருவதை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்
சாராயம் விற்ற 2 பேருக்கு ஜெயில்
Published on

அணைக்கட்டு:

ஒடுகத்தூர் அடுத்த சின்னப்புதூர் அருகே உள்ள எள்ளுபாறை மலை அடிவாரத்தில் நேற்று வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சிலர் கலாச்சாராயம் நின்றுக்கொண்டு இருந்தனர்.

போலீசார் வருவதை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார். போலீசார விரட்டி சென்றதில் ஒருவர் மட்டும் சிக்கிக்கொண்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர் எள்ளுப்பாறை மலை கிராமத்தை சேர்ந்த சின்னப்பன் (45) என்பதும், இவர் கள்ள சாராயம் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

சின்னப்பனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 70 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், பீஞ்சமந்தை அடுத்த குண்ராணி பகுதியில் சாராயம் விற்றுக் கொண்டிருந்த எள்ளுப்பாறை பகுதியை சோ்ந்த பிரபு (24) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி , ஜெயிலில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com