குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல் வைப்பு

30 போதை பாக்கெட்டுகள் பறிமுதல் வியாபாரி கைது
குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல் வைப்பு
Published on

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நாட்டறம்பள்ளி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது நாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி ராஜவீதி பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் சோதனை செய்தபோது அரசு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் (ஹான்ஸ் பாக்கெட்டுகள்) விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து 30 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

பின்னர் குட்கா விற்ற மளிகை கடைக்கு தாசில்தார் பூங்கொடி முன்னிலையில் வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com